Home உலகம் ’’அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனை; ஆனால், அதை செய்யாததற்கு காரணம்...’’இம்ரான்கான் விளக்கம்

’’அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனை; ஆனால், அதை செய்யாததற்கு காரணம்…’’இம்ரான்கான் விளக்கம்

இந்தியாவில் நிர்பயா சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளை போலவே, பாகிஸ்தானில் ஒரு பெண்ணின் பாலியல் பலாத்காரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தன் இரு குழந்தைகளுடன் பாகிஸ்தான் லாகூரில் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார் அந்தப்பெண். நடுவழியில் பெட்ரோல் தீர்ந்துபோய் திடீரென கார் நின்றுவிட்டதால், போலீசுக்கு போன் செய்து உதவி கேட்டிருக்கிறார். அவர்கள் வந்து உதவுவதாக சொல்லவும், குழந்தைகளுடன் காருக்குள்ளேயே அமர்ந்திருக்கிறார்.
அப்போது அந்த வழியாக சென்ற இருவர், கார் ரொம்ப நேரமாக நிற்பதை தெரிந்துகொண்டு, அந்தப்பெண்ணை காரை விட்டு வெளியே இழுத்து தள்ளி, குழந்தைகளின் கண் முன்னேயே பாலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்வத்தினால் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது. குற்றவாளிகளில் ஒருவன் பிடிபட்டுவிட்டான். இன்னொருவனை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் மக்கள் மத்தியில் தூக்கிட வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
அதனால், பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாக இருக்கும் என்று கூறியுள்ளார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.

இது குறித்து அவர் மேலும், ‘’குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடுவதை விட ஆண்மை நீக்கம் செய்வதே சரியானதாக இருக்கும். ஆனால், அது மனித உரிமை மீறலாக பார்க்கப்படுவதாலும், அதனால், வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்று ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானுக்கு அளித்துள்ள தகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால்தான் அந்த முடிவை நிறைவேற்றாமல் இருக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கள்ளச்சந்தையில் கொரோனா தடுப்பூசிகள்… வாங்கும் நாடுகளை எச்சரிக்கும் ஐநா!

உலகளவில் கொரோனாவால் 20 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கும் வேளையில், அதற்கெதிரான தடுப்பூசியை தேவைக்கு அதிகமாக வாங்கும் நாடுகளை ஐநா சபை பொதுச் செயலாளர் அந்தோனி குடெரெஸ் எச்சரித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லக்கட்டு இன்று...

பண தகராறில் 19 வயது இளைஞர் கல்லால் தாக்கி கொலை – இருவர் கைது

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் 19 இளைஞரை கொலை செய்து குவாரியில் வீசிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

இந்தியா மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் என ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை கூறியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!