முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை அதிதீவிரமாகப் பரவிவருகிறது. குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி சென்றுவிட்டது. கொரோனா பரவலைத் தடுக்கவும் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையைப் போக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

அதன் ஒருபகுதியாக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு கொரோனா தடுப்புக்கான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக்கொண்டார். அதன்படி தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற துவங்கியிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி, காங்கிரஸில் விஜயதரணி, முனிரத்தினம்,
மமக சார்பில் ஜவாஹிருல்லா, சிபிஐ சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, சிபிஎம்மில் சின்னதுரை, நாகை மாலி, கொமதே சார்பில் ஈஸ்வரன் ஆகியோரும் வேல்முருகன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி , மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.