‘விவசாயி என தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த சட்டங்களை ஆதரிப்பது துரோகம் இல்லையா?’ : கமல் ஹாசன்

 

‘விவசாயி என தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த சட்டங்களை ஆதரிப்பது துரோகம் இல்லையா?’ : கமல் ஹாசன்

தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அதிமுக அரசு மிகப்பெரும்
துரோகத்தைச் செய்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவும் விவசாய மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் உள்ளது. மத்திய அமைச்சர் ஒருவர் இந்த மசோதாவை எதிர்த்து தன் பதவியையே தூக்கி எறிகின்ற பொழுது, விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

‘விவசாயி என தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த சட்டங்களை ஆதரிப்பது துரோகம் இல்லையா?’ : கமல் ஹாசன்

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை என்றால், 2017 ஆம் ஆண்டு நம் தமிழக விவசாயிகள் தலைநகரில் பல நாட்களுக்கு போராடிய போது மவுனம் காத்தது ஏன்?

‘விவசாயி என தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த சட்டங்களை ஆதரிப்பது துரோகம் இல்லையா?’ : கமல் ஹாசன்

விவசாயக் கடன் ஒரு புறம், முறையான நீர் மேலாண்மை இன்றி வறட்சி மறுபுறம், புயல் வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பற்ற நிலை இன்னொரு புறம் என முற்றிலும் முறையற்ற சூழலைத் தான் விவசாயிகளுக்கு இந்த அரசுகள் தொடர்ந்து பரிசாக தந்துகொண்டு இருக்கின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே இருக்கும் திட்ட முனைப்புகள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த தமிழக அரசு,விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் இந்தப் புதுச்சட்டத்திற்கு ஆதரவுஅளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரும்துரோகத்தைச் செய்திருக்கின்றது ஆளும் அதிமுக அரசு.

எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத்திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். நம் விவசாயிகள் நலன் காக்க, நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் இந்த சட்டங்களை பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.