Home சினிமா தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகா ஆனந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #YashikaAnand என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand
தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

1999ல் டெல்லியில் பிறந்தவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாபியாக இவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்ததால் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்கூலில்தான் படித்து வந்தார்.

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த யாஷிகா ஆனந்த், இனிமே இப்படித்தான் படம் மூலம் 2015ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு-2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் பிரபலம் ஆனார்.

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் நணபர்கள் இரண்டு பேரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, யாஷிகா ஆனந்து விரைந்து நலம்பெற அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரு வந்தவங்க அதை குறுகுறுன்னு பார்க்காம ,விறு விறுன்னு இதெல்லாம் செய்யுங்க

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை....

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.
TopTamilNews