பெரிய விபத்தைத் தடுக்க சிறுமி செய்த செயல் – வைரலாகும் வீடியோ! #ViralVideo

 

பெரிய விபத்தைத் தடுக்க சிறுமி செய்த செயல் –  வைரலாகும் வீடியோ! #ViralVideo

நல்ல விஷயங்கள் செய்ய நிறைய பணம் இருக்க வேண்டும்… பெரிய ஆளாகியிருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல மனதும். நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணமும்… அதைத் தாமதிக்காது உடனே செய்யும் முயற்சியும்தான் வேண்டும். அப்படியான அற்புதமான செயல் எல்லோரையும் ஈர்த்து விட்டது.

சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நன்கு மழை பெய்யும் நாள். சாலையில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் குடை பிடித்துக்கொண்டு நடந்து செல்கிறார்கள். அநேகமாக அக்கா – தம்பியாக இருக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் வாங்கி வரச் சொன்ன பொருளை வாங்கியபடி கதை பேசிக்கொண்டே செல்கிறார்கள்.

பெரிய விபத்தைத் தடுக்க சிறுமி செய்த செயல் –  வைரலாகும் வீடியோ! #ViralVideo

அப்போது ஓர் இடத்தில் மழை நீர் சுழன்று அடித்துக்கொண்டு செல்கிறது. ஆமாம்… சாக்கடையின் ஒரு பகுதிமூடப்படாமல் திறந்து கிடக்கிறது. அதைப் பார்க்கும் சிறுவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கல். அந்த சிறுமி குடையையும் பொருளையும் சிறுவனிடம் கொடுக்கிறாள்.

சாலையின் ஓரத்தில் கிடக்கும் போலிஸ் தடுப்பை எடுத்து வந்து அந்த சாக்கடை ஓட்டையின் மேல் போடுகிறாள். அப்போதும் சாக்கடை ஓட்டை முழுமையாக அடைபட வில்லை. அப்படியே விட்டுச்சென்றால் நிச்சயம் யாரேனும் விழுந்து பெரிய விபத்து ஏற்படக்கூடும். பின்னணியைப் பார்க்கையில் வீடுகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் குழந்தைகளும் வரக்கூடும்.

பெரிய விபத்தைத் தடுக்க சிறுமி செய்த செயல் –  வைரலாகும் வீடியோ! #ViralVideo

எனவே அந்த சிறுமி அருகில் இருக்கும் பலகையைத் தூக்கிப் போட நினைக்கிறாள். மழை விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. அந்தப் பலகையை எளிதாக அவளால் தூக்க முடியவில்லை. சிரமப்பட்டு தூக்கி அந்த சாக்கடை ஓட்டையை அடைக்கிறாள். அதன்பின் தம்பியிடமிருந்த குடையை வாங்கிக்கொண்டு அவனோடு வீட்டுக்குச் செல்கிறாள்.

இந்த நல்ல செயலை யாருடைய பாராட்டுதலுக்காவும் அந்தச் சிறுமி செய்ய வில்லை. யாரும் அந்த ஓட்டையில் விழுந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் செய்தாள். அவளின் செயலை யாரோ தூரத்திலிருந்து வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட, அது வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அந்தச் சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இன்னும் பலரும் அந்தச் சிறுவர்களுக்குப் பாராட்டுகளை அள்ளிக்கொடுக்கின்றனர்.