” 96 அடி உயரம் 400 டன் எடை” ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

 

” 96 அடி உயரம் 400 டன் எடை” ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இந்த தேர் திருவிழா நடைபெற்றுள்ளதாக சான்றுகள் கூறுகிறது. 1926-ம்ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தின் போது திருவாரூர் தேர் முற்றிலும் எரிந்தது. இதையடுத்து மீண்டும் 1928-ம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு 1930-ம் ஆண்டு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

” 96 அடி உயரம் 400 டன் எடை” ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின்போது ஆடித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா மார்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. உத்திர திருவிழாவையொட்டி நடந்துவரும் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

” 96 அடி உயரம் 400 டன் எடை” ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

96 அடி உயரத்தில் 400 டன் எடையுடன் நான்கு குதிரைகள் 425 நீளமுள்ள வடம் இணைக்கப்பட்டு ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. ஆழித்தேருக்கு முன்புறம் விநாயகர் ,சுப்ரமணியர் தேர்களும் பின்புறம் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வலம் வருகின்றன. ஆழித்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.