‘கொரோனா வைரஸ் 2 வது அலை கைமீறிவிட்டது’… ஆட்டம் காணும் அரசு!

 

‘கொரோனா வைரஸ் 2 வது அலை கைமீறிவிட்டது’… ஆட்டம் காணும் அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக பதிவாகும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நேற்றைய நிலவரப்படி 7,819 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்தனர். 3,464 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுதிரும்பினர். 54,315 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘கொரோனா வைரஸ் 2 வது அலை கைமீறிவிட்டது’… ஆட்டம் காணும் அரசு!

இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை கையிலெடுத்தது. கொரோனா விதிமீறல்களுக்கு அபராதம், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள், கடற்கரைகளுக்கு செல்லத் தடை, கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமல்படுத்தியது. ஒரு பக்கம் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திண்டாடி வருகிறது.

‘கொரோனா வைரஸ் 2 வது அலை கைமீறிவிட்டது’… ஆட்டம் காணும் அரசு!

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய அரசே நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்திருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.