Home சினிமா ’வேல்முருகன் பாடும்போதெல்லாம் டான்ஸ் ஆடணுமா... ஆத்தாடி!’ – பிக்பாஸ் 24-ம் நாள்

’வேல்முருகன் பாடும்போதெல்லாம் டான்ஸ் ஆடணுமா… ஆத்தாடி!’ – பிக்பாஸ் 24-ம் நாள்

பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லாதது பிக்பாஸ் வீடு. மேலும், பல விசித்திரங்களும் நிறைந்தது. கல்யாணம் அல்லது பெரிய விசேஷத்திற்கான மனநிலையோடு நூறுநாளும் இருக்க வேண்டும். அதுவே ஒருநாளில் சலித்துபோய்விடும். அந்தச் சலிப்பை சக போட்டியாளர்களிடம் காட்டுவது என்று தொடங்கி பல சிதைகள் நடக்கும்.  எதிரே இருப்பவர் தன்னிடம் ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்று கண்டுபிடிக்கவே நேரம் பிடிக்கும். அப்படியான சில பஞ்சாயத்துகள் 24-ம் நாள் எப்பிசோட்டில் நடந்தது.

அர்ச்சனா – பாலா சண்டை காட்சிகளோடு இன்று தொடங்கியது. வீட்டைக் கூட்டி சுத்தம் செய்யும் அணியில் உள்ள பாலா, அதைச் செய்யாமல் தூங்கிவிட்டார். எழுப்பும்போது தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதே பஞ்சாயத்து. நேற்று திமிர்த்தனத்தோடு பாலா நடந்துகொண்டதில் ரியோ சூடாகியிருந்தார். ஆனால், அவருக்கு கேமராவில் பதிவாகிக்கொண்டே இருக்கிறது என்ற கான்சியஸ் இருந்ததால் நிதானித்து கோபப்பட்டார்.

படுக்கும் அறையில் இந்தப் பிரச்சனையை மேலும் கிளப்பினார் அர்ச்சனா. இதில் தான் ஒருவிதமாகச் சீண்டப்பட்டதாக உணர்ந்ததால், அப்படியே விட்டுவிட்டு போக முடியவில்லை அவரால்.

‘ஆஜித், வேலு இருவரும் வந்து எழுப்பும்போது உடம்பு சரியில்லை என்றால் விட்டிருப்போமே’ என்ற அர்ச்சனாவிடம் ‘கூப்பிட்ட விதம் பற்றி பாலா சொன்னதும், ‘ஆமா… அவர்கள் வந்து கூப்பிட்டதும் நானும் கைக்கட்டி, வாய்பொத்தி கூப்பிடணுமா’ என்று நடித்தே காட்டினார் அர்ச்சனா. கோபத்தில் உச்சத்தில் இருந்தார்.  ‘இதுபோன்ற கேப்டன் சொன்னா கேட்க மாட்டேன்’ என்று ஆணவத்தோடு த முடிவில் உறுதியாக இருந்தார் பாலா. ஒருகட்டத்தில் புரஃபொஷனல் கேப்டனா என்னை அடுத்த நாட்களில் பார்ப்பீங்க’ என்று இன்ஸ்பெக்ட்ராக சார்ஜ் எடுப்பதுபோல சீரியஸாகச் சொன்னார் அர்ச்சனா. உண்மையில் பிக்பாஸ் கேப்டன்ஷிப் அப்படி அதிகாரம் வாய்ந்த பதவியா என்ன? ஆனால், அதற்கும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

’இந்த வாரம் பர்ஃபாமென்ஸ் விருது கொடுக்கும்போது இதெல்லாம் சொல்லுங்க’ என்று ஷனம் ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். ரியோ தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உச்சகோபத்தை அடைந்து கத்திக்கொண்டிருந்தார். நிதான கோபம் என்று அதைச் சொல்லலாம்.

இந்த நேரத்தில் வேல்முருகன் கொந்தளித்து விட்டார். ‘நான் ஆரம்பத்திலேருந்து சரியாகத்தான் பேசறேன். நீங்கதான் ஏதாச்சும் சொல்லி குழப்பி விட்டுறீங்க’என்று ஒட்டுமொத்தமான தன் வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிக்கொண்டிருந்தார்.

காட்சி மாறுகிறது. கிச்சன் ஏரியாவில் சம்யுக்தாவிடம் ‘நான் காலையில செஞ்ச வேலையெல்லாம் பற்றி யாருமே பேச மாட்டேங்கிறாங்க’ என்று குரல் தணிந்து சொலிட்டு இருந்தார் பாலா.

இன்னொரு பக்கம், வேல்முருகன் சொன்ன விதம் வைத்து ரியோ கிண்டல் செய்து அர்ச்சனாவை இயல்புக்கு கொண்டுவர ட்ரை பண்ணினார். வேல்ஸூம் ஒத்துழைக்க ட் அது சாத்தியமானது.

பாலா வெளியே தனியாகச் சென்று வழிந்த கண்ணீரை டிஸ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டார். ’ஆம்பள புள்ள அழலாமா?’ என்ற மைண்ட் வாய்ஸ் கேட்டதைப் போல சில நொடிகளில் சுதாரித்து வீட்டுக்குள் செல்ல, ‘அவ்வளவுதான் சண்டை போலிருக்கு’ என லைட்ஸ் ஆஃப் பண்ணி, பின்கதை சுருக்கத்திற்கு பிக்பாஸ் தொண்டையைச் செருமத் தொடங்குகையில் உள்ளே சுரேஷ், பாலா குரூப் பேசுவதுகேட்க, கேம்ராவை சூம் செய்தார்.

‘என்ன இருந்தாலும் அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பு’ போய் மன்னிப்பு கேள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் சுரேஷ். ‘நானே நண்டு சுண்டு கால்ல விழுந்தேனே’ என்பதுபோல தன்னையே உதாரணமாகக் காட்டிக்கொண்டிருந்தார். ‘அதெல்லாம் கேட்க மாட்டேன்’ என்று வீம்பாகச் சென்ற பாலா, அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டார்.

ரியோ, அர்ச்சனா குரூப் வெளியே உட்கார்ந்துகொண்டு, பாலாவைப் பார்க்க கோபமா இல்ல, பாவமா இருக்கு என்று சொல்லிட்டு இருதார் அர்ச்சா. அங்கே வந்து உட்கார்ந்த பாலா பேசத் தொடங்கி மன்னிப்பு கேட்டு முடிப்பதற்குள் அர்ச்சனா மன்னித்து, அவரை மகனாவே ஏற்றுக்கொண்டார். ‘எனக்கு மகன் இல்ல… உன்னைப் பார்த்தப்பா அப்படித் தோணுச்சு’ என்று அழுத அர்ச்சனாவிடமோ, ‘எங்கிட்ட யாரும் இப்படி அன்பு காட்டி பழக்கம் இல்ல… அதான’ என்று அணைத்துக்கொண்ட பாலாவிடமோ நடிப்பு இருந்ததா அப்போது தெரியவில்லை.

உண்மையில் அர்ச்சனா – பாலா இருவரும் வளர்ந்த சூழலே இதற்கு பின்புலமாக இருக்க முடியும். பெற்றோர் அன்பில்லாத வளர்ந்த பாலா, தம் மீது காட்டப்படும் அனைத்து உணர்வுகளையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால், இயல்பான வீட்டுச் சூழலில் வளர்ந்த அர்ச்சனாவுக்கு இயல்பாக முகிழ்க்கும் தம் அன்பை உதாசீனப் படுத்துகிறாரே என்ற கவலை.

இருவர் தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றும். அது முட்டிக்கொள்ளும்போது சண்டையும் வரும். ஆனால், இதில் டிவிஸ்ட் என்னவென்றால், இதையெல்லாம் மூன்றாம் நபர் ஒருவர் முழுதாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற கான்ஷியஸோடு எப்படி இந்தச் சிக்கலை எதிர்கொள்ளபோகிறார்கள் என்பதுதான். பாலா – அர்ச்சனா சண்டை சுபம் போட்டு முடித்தாற்போல இருந்தாலும் முடிந்ததாக அப்போதே தோன்றியது.

24-ம் நாள்

நேற்று கொடுத்த டாஸ்கின் பாடலான ‘தங்கமே உன்னைத்தான் தேடி…’ யை ஒலிக்க விட்டார் பிக்கி. இப்போதெல்லாம் கிளாஸ் மிஸ்க்கு ‘குட்மார்னிங்’ சொல்லும் சடங்கைப் போலத்தான் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ரம்யா, ஷிவானி உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர.

பாட்டு நின்றதுமே கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார் பாலா. ’நான் கேப்டனானது உன் மாமியாருக்கு இருக்கு’ என்று ஷனமிடம் சொன்ன பாலா, ‘பிக்பாஸ் வீட்டில் யாரும் ஃப்ரெண்ட்ஸ் இல்ல; யாரும் எதிரியும் இல்ல.. எல்லோருமே போட்டியாளர்கள்தான்’ என்றார். அரசியலில் சொல்வார்கள் ’நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை’என்று. ஆனால் இங்கு நண்பனே இல்லை போல.

கார்ப்பரேட் தத்துவத்தை அரை நிமிடத்தில் சொல்லிவிட்டார் பாலா. உறவுகள் மீதான நம்பிக்கைகளை அற்றுப்போக வைத்துவிட்டால், தான் சம்பாதிப்பதை தானே செலவழிப்பவராக மாறுவார். நிறைய வாங்குவார். நிறைய வாங்க நிறைய சம்பாதிக்க நினைப்பார். நிறைய சம்பாதிக்க நிறைய நேரம் வேலை செய்வார். நிறைய நேரம் வேலை செய்த ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க கேளிக்கை விஷயங்களை நாடுவார். அங்கே செல்லவும் இன்னும் நிறைய நேரம் வேலை செய்வார். நவீன வடிவ அடிமையாகி விடுவார். இதைத்தான் கார்ப்பரேட்டுகள் விரும்புகின்றன. ஓகே. பேக் டூ பிக்பாஸ்.

’தங்கம்’ டாஸ்க்கை முடிவுக்குக் கொண்டு வரும் அறிவிப்பைத் தந்தர் பிக்கி. ஒவ்வொருவரின் தங்கத்தை எடை போட்டு அளவைச் சொன்னார். குறைந்த பட்சம் 4 பேர், அதிகபட்சம் 8 பேர் கொண்ட 3 குழுக்கள் பிரிய வேண்டுமாம். அதிக தங்கம் வைத்திருக்கும் அணிக்கு சிறப்பு பலன் உண்டாம்.

உண்மையிலேயே இது சுவாரஸ்யமாகவே இருந்தது. அர்ச்சனா, பாலா என இருவர் தலைமையில் அணி உருவாக, மூன்றாவது அணி வேண்டும் என அடம்பிடித்தார் பிக்பாஸ். மூன்றாவது அணி என்றாலே பிரச்சனைதான் போல.

சட்டென்று ஷிவானி, தான் தனியா நிற்கிறேன். நானே தனி அணி என்றார். ரம்யா, கேபி, சோம்ஸ் அவர்களோடு சேர, அர்ச்சனா அணியிலிருந்து ஓரிருவரை அனுப்பச் சொல்லி வாதிட்டார் பாலா. நியாயமான கோரிக்கைதான். இப்போது கேபி, ரம்யா இருவரும் பாலா அணியை விட்டு வெளியேறியதும் பாலா அணியில் தங்கம் அளவு குறைவானது. உடனே பாலா ஒரு உத்தியைக் கையாண்டார். அதாவது தானே அர்ச்சனா அணிக்குச் செல்வது. அதாவது ஓர் அணியைக் கட்டமைத்தவரே அந்த அணியை நட்டாத்தில் விட்டுவிட்டு வேறோர் அணிக்குச் செல்வது. அதுவும் தன் அணிக்கு வலிக்காமல் சொல்லி, இது உத்தி என ஏமாற்றிச் செல்வது பாலா அரசியல் ஈடுபட்டால் நல்ல எதிர்காலம் இருக்கு. ஏனெனில், வெற்றி பெற்ற அணியில் பாலா இருப்பார். ஆனால், அதனால், அவரால் உருவாக்கப்பட்ட அணியினருக்கு என்ன பலன்?

ரொம்பவே சூது நிறைந்தவராக, சுயநலம் மிக்கவராக பாலாவை அடையாளம் காட்டிய இடம் இந்த அணி பிரித்தலில்தான்.

அதிக எடை கொண்ட அர்ச்சனா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி எந்த வேலையும் செய்ய வேண்டமாம். மேலும், புதிய விதிகளை உருவாக்கி மற்றவர்களை செய்ய வைக்கலாம்’ என்று பிக்கி அறிவிப்பு முடிந்ததுமே ‘யார் என் முகுதுகை சொறிந்துவிட போறீங்க’ என்று அர்ச்சனா கேட்க, ‘வேணாம் பிக்பாஸ்’ என நிஷா மன்றாடிக்கொண்டிருந்தார்.

’சும்மா சாப்பிட போர் அடிக்குது.. ஷிவானி நீ டான்ஸ் ஆடு.. ரம்யா நீ பாட்டு பாடு’ ஏக உத்தரவிட்டது அர்ச்சனா அணி. டைமிங் பார்த்து ‘போடா… போடா புண்ணாக்கு’ பாடலைப் பாடி மூக்கை உடைத்தார் ரம்யா. கில்லிங் அண்ட் லாஃபிங் டாஸ்க் கொடுக்க, ஷனம் செய்வதைப் பார்த்து, ‘நீ செய்யறது லாஃபிங்.. அதை நாங்க பார்க்கிறது கில்லிங்… வேணாம்” என ஸ்டாப்பினார் ரியார்.

’பிக்பாஸ்க்கு லவ் டார்ச்சர் கொடுக்கக்கூடாது’ இது நிஷாக்கு. ‘வேலு பாடினா… நீங்க ஆடணு’ இது ரம்யா, ஷிவானிக்கு (அய்யயோ வேலு சாப்பிட நேரம் தவிர பாடிட்டே இருப்பாரே – இருவரின் மைண்ட் வாய்ஸ்) அர்ச்சனா வாக்கிங் போனா குடைப்பிடிக்கணும் – இது அனிதாவுக்கு.

இப்படியான தண்டனைகள் பட்டியல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார்கள் வெற்றி பெற்ற அணி. இன்னொரு பக்கம் ‘சம்பந்தம் இல்லாம ஆர்க்கியூ பண்ண மாட்டேன்’ என பத்து முறை சொல்லும் டாஸ்க்கை ஷனமிடம் கொடுத்தார் பாலா. அதைச் சொல்லியதும் ‘முந்திரிக்கொட்டை மாதிரி…’ என்ற வசனத்தைச் சொல்ல சொன்னார். அதன் அர்த்தம் புரியாமல் சொன்னார் ஷனம்.

இரு அறைகளுக்கு இடையேயான தடுப்பில் ஏறி இறங்கிக்கொண்டே ‘வானிலை அறிக்கை படிக்க வேண்டும்’ என அனிதாவுக்கு கொடுத்த டாஸ்க் சிறப்பு.

காட்சி மாற்றத்தில் ஷிவானி ஏதோ ஒன்றை பாலாவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார். தங்கமே டாஸ்க் நிறுத்தப்பட்டது. சேவை செய்துகொண்டிருந்தவர் ஓடிச்சென்று செய்ய சொன்னவர்களை அடித்து துவைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஷிவானி பாலாவுக்கு ஊட்டி விடுவதை நிறுத்தவே இல்லை. சம்யுக்தா டாஸ்க் முடிஞ்சிட்டு என்று சொல்லியும் நிறுத்த வில்லை. மேடம்… அது டாஸ்க்கா இருந்தா நிறுத்திடுவாங்க… அது லவ். பாலா ஒவ்வொருவரிடமும் தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் வித்தை கற்றவராக இருக்கிறார்.

‘முந்திரிக்கொட்டை’ வசனம் இரட்டை அர்த்தம் வர்ற மாதிரி இருந்தது ஷனம்க்கு உரைக்க, அழ ஆரம்பித்துவிட, அனிதா தேற்றினார். ‘ஃப்ரெண்ட்ஸ் ஷிப்பை யூஸ் பண்ணிட்டு பாலா இப்படி பண்ணிட்டான்’ என ஷனம் சொன்னபோது, ‘இந்த வீட்ல யாரும் நட்பும் இல்ல…’ என்று ஆரம்பித்து பாலாவின் டயலாக்கைச் சொன்னார் அனிதா. ஆச்சர்யமாக இருந்தது. நேற்று ஒப்பாரி வைத்த அனிதாவா இது. ஒரே நாளில் மந்திரம் போட்டதுபோல தெளிவாகி விட்டாரே!

மூன்று முறை ‘ஸாரி’ சொன்னாதான் ஒத்துப்பேன் என்று சிணுங்கினார் ஷனம். ‘இவ்வளவுதானா… உன் டக்’னு கேலியாக ஸாரி கேட்க, கேபி, ஷிவானி, பாலா எனும் மூவர் கேங்கில் உட்கார்ந்து அணத்தத் தொடங்கினார் ஷனம். நிஜமாகவே பிக்பாஸ் வீட்டு குரூப்பிஸத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் பாலா.

அர்ச்சனா குருப்பில் உரிமை எடுத்துக்கொள்வது ரியோ எப்படி எதிர்கொள்வார் என்பது ஒரு கதை. ஷிவானி – பாலா புது உறவு கேபி – பாலா அண்ணன் – தங்கை உறவில் என்ன சிக்கலை ஏற்படுத்தும் என்பது மற்றொரு கதை. ஷிவானி, ரம்யா என திரிந்த தோழிகள் ஒருவர் பாலாவோடு இனி திரிய அவரின் ரியாக்‌ஷன் என்ன என்பது இன்னொரு கதை. பார்ப்போம் இனி வரும் நாட்களில்.. ( பிக்பாஸின் பின்கதைச் சுருக்க குரலில் படிக்கவும்)

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

இருபத்தி ஒன்று | இருபத்தி இரண்டு | இருபத்தி மூன்று | இருபத்தி நான்கு

மாவட்ட செய்திகள்

Most Popular

வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை

பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.3,150.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் இந்தியா நிறுவனம் தனது...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை, இது வெளிப்படையான போட்டி என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். உத்தர...
Do NOT follow this link or you will be banned from the site!