அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

 

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் நான்கு மணிநேரம் ஒளிப்பரப்பானது இதுவே முதன்முறை. மற்ற மொழிகளில் நடந்திருக்கக்கூடும். பண்டிகை தின ஸ்பெஷல்  என்பதால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான் இருக்கும் என நினைத்தால் கோபங்களும் செண்டிமெண்ட் காட்சிகளுமாக நிறைந்திருந்தது 22- நாள் எப்பிசோட்.

22-ம் நாள்

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

’நாலு மணிநேரம் கண்டண்ட் தேத்தியாகணும்’ என சீக்கிரமே பாட்டைப் போட்டு எழுப்பினார் பிக்பாஸ். ‘மதுர குலுங்க’ என கிராமத்து துள்ளல் பாட்டுக்கு எல்லோருமே உற்சாகமாக ஆடினார்கள் ஆஜித்தைத் தவிர.

நேரடியாக எவிக்‌ஷன் பிராசஸ்க்கு வந்தார் பிக்கி. வெளியில் போட்டியாளர்கள் போட்டோக்கள் இருக்கும். யாரை எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யறாங்களோ அவர்களின் போட்டோவை அருகில் எரியும் அடுப்பில் போட வேண்டுமாம்.

முதல் ஆளாய் வந்தது ரம்யா. இரவில் போட அல்லது காலையில் டான்ஸ் ஆட என்று அவர் வைத்திருக்கும் (கண்ணாடியோடு வந்தார். ஆர்மி கலைய நீங்களே காரணமாயிடாதீங்க மேடம்)

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

டிப்ளமேசியா இருக்காங்க (இந்த சீசனுக்கான வார்த்தை போல) எனச் சொல்லி ரம்யாவையும், சிலருக்கு ஆதரவாக இருக்காங்க என நிஷாவையும் எரித்தார் ஷனம். சுரேஷ் தேர்ந்தெடுத்த இருவர் நிஷா, ரமேஷ்.

சொல்லி வைத்தாற்போல அடுத்து நிஷா வந்து சுரேஷைச் செலக்ட் செய்தார். இன்னொருவர் நாம் யூகித்ததுபோல பாலாஜிதான். சோம்ஸ் எரித்தது சுரேஷ் மற்றும் பாலாவை.

பாலா எரித்தது சோம்ஸ் மற்றும் ரியோவை. ரியோ எரித்தது பாலா மற்றும் ரம்யாவை. சம்யுக்தா எரித்தது அனிதா மற்றும் ரியோவை (என்னடா இது அனிதா இன்னும் வரலையேன்னு நினைச்சேன்)

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அனிதா வந்ததும் நிச்சயம் ஷிவானி பெயர் இருக்கும் என யூகித்தால் சம்யுக்தாவையும் கேபியையும் எரித்தார். (ஆட்டத்துல ஒரு ட்விஸ்) சரி, ஷிவானி வரும்போது அனிதா போட்டோவை எரிப்பார் என யூகித்தால் ஷனம் மற்றும் வேல்முருகனை எரித்தார். (இடையில என்னமோ நடந்திருக்கு)

நேற்று யார் இருக்கணும், யார் வெளியேறணும் எனும் டிக் பண்ணும் விளையாட்டின் தொடர்ச்சியாகவே இருந்தது. நேற்று X குறி போட்டவர்களைத்தான் இன்று எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்தார்கள்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

இப்படி மாற்றி மாற்றி எரித்து விளையாட, இறுதியாக பிக்கி எவிக்‌ஷன் லிஸ்ட்டைப் படித்தார். சோம்ஸ், வேல் முருகன், ஆஜித், ஷனம், நிஷா, ரியோ, அனிதா, சுரேஷ், ரம்யா, ரமேஷ், ஷனம்…. என சொல்லிக்கொண்டே இருக்க, எங்கே எவிக்‌ஷனான ரேகா பெயரையும் சேர்த்திடுவாரோ என்ற பயம் வந்துடுச்சு. 11 பேரைச் சொல்லி நிறைவு செய்தார் பிக்கி.

‘என்ன வேலு உன் பெயரெல்லாம் நாமினேஷனில் இருக்கு. ஆனா, உன்னை ஷனம் காப்பாத்திடுவாங்க. ஏன்னா, அவங்கதான் வெளியே போக சான்ஸ் இருக்கு. இல்லாட்டி நீங்கதான்’ என்று வேல்முருகனை அழ வைக்க ட்ரைப் பண்ணிட்டு இருந்தார் பாலா. ‘நான் உன்னை கேட்டனா…” என்பதுபோல பாவமாய் ஒரு ரியாக்‌ஷனைக் காட்டினார் வேல்ஸ்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

வழக்கம்போல நாமினேஷன் பற்றி மூலைக்கு மூலை குந்திகினு பேசிட்டு இருந்தாங்க. ’என்னையெல்லாம் பிக்பாஸே நாமினேட் பண்ணியிருப்பார்டா…’ என்ற நிஷாவுக்கு, ‘இல்ல இல்ல… ஆடியன்ஸே பண்ணியிருப்பாங்க’ என்று ரியோ கவுண்டர் கொடுத்துகொண்டிருந்தார்.

விஜயதசமி அறிவிப்பு கேட்டதும் உற்சாகமானார்கள். ஆனால், நமக்கு உற்சாகத்தை ‘கட்’ செய்யும்விதமாகச் சொன்னது ‘அனிதாவே நிகழ்ச்சி தொகுப்பாளர்’. (நாலு மணிநேரமுமா… உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்) கிராமம், நகரம் என இரு அணிகளாக பிரிந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

‘ஆஹா… இதுக்காத்தானே காத்திருந்தேன்’என்பதுபோல ‘மைக் டெஸ்ட் ஒன், டூ, த்ரி…’ என ரெடியானார் அனிதா. ’வாழை மரம் ஏன் கட்டறாங்க தெரியுமா?’ வேலை செஞ்சிட்டு இருந்த ரியோவைக் கேட்க, ‘கட்டலன்னா கீழே விழுந்துடும்’ என பத்து இருவது வருடம் நினைவு நாள் கொண்டாடின ஜோக்கைச் சொன்னது…. வேற யாரு நிஷாதான். அதுக்கு ஒரு காரணம் சொன்னார் வேல்ஸ். ‘போறியா… இல்ல வாய்ல கத்திய விடட்டுமா…’ என்பதுபோல ரியோ ரியாக்‌ஷனைக் காட்ட, இடத்தை மாற்றினார்.

எல்லோரும் ஓரிடத்தில் நிற்க வைத்து, ’விஜயதசமி வாத்துகள்’ எனக் கத்தினார்கள் ஸாரி… ஸாரி வாழ்த்தினார்கள். கொலு பொம்மைகளைக் கொடுத்து வண்ணம் தீட்ட சொல்லியிருந்தார் பிக்கி. அதுக்கு ரெஃப்பரன்ஸ் போட்டோ வேற… இதெல்லாம் ரொம்ப ஓவரூ.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

ஒவ்வொருவரிடமும் சென்று ‘இவங்க இப்போ என்ன செய்யறாங்கன்னா…’ என்று அனிதாவின் அலப்பறைகள் தொடர… வடிவேலாட்டாம் ‘முடியல குருநாதா.. முடியல’ என அலறினார்கள். இன்னொரு பக்கம், ஷிவானியிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தார் பாலா. அவரும் நீங்க இப்ப பாட்டு பாடுற மூட்ல இருக்கீங்களா… என தில்லானா மோகனாம்பாள் சிவாஜியிடம் கேட்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தார். ’ஓஹோ… ’அப்ப.. கேபி வாழ்க்கை?’

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

’பாசம்மா வந்த பாஸம்மா’ என வார்த்தையில் விளையாடிக்கொண்டிருந்தார் ரம்யா. ’பொம்மை தயாரிக்கிறவங்க பாவம்ல’ என அனிதா எடுத்துக்கொடுக்க, ‘இரும்மா ஒரு பொசிஷனுக்கு வந்துக்கறேன்’ என்பதாக அர்ச்சனா ஒரு லெக்சர் இழுக்க…. (பிக்பாஸ் எடிட்டர் இதுக்கெல்லாம் இல்லையா ஒரு End)

அடுத்த கட்டமாய்  சமையல் போட்டி. சுரேஷ் இல்லாத கிச்சனா… சண்டையினாலும் சட்னியானாலும் அங்கே சுரேஷ் எண்ட்ரி ஆயிடுவார். அர்ச்சனாவும் சுரேஷும் கிராமத்து சமையல் செய்ய, ஷனமும் பாலாவும் நகரத்து சமையலைக் கிண்டிக்கொண்டிருந்தார்கள். என்ன பாலா… சண்டை போட்டாலும் டக்குனு ரெடியாயிடுறீங்க.. ராசி ஆவதாக இருந்தாலும் டக்குனு ரெடியாயிடுறீங்க… இதில் ஒண்ணை சொல்ல மறந்துட்டேன். போட்டி நடுவர் அனிதாவாம்.

அனிதா வழக்கம்போல, ‘சமையல் இல்லாட்டி செவ்வாய் கிரகமே இருக்காது’ என்பதுபோல அங்கிருந்து நேரடி வர்ணனை செய்ய இரிட்டேட் ஆனார் சுரேஷ். நீங்க மட்டுமா பாஸ். ’பேசாமா போறீயா… வாய்ல்ல கத்தி விடட்டுமா என்பதுபோல சுரேஷ் கடித்துவிட, நகர்ந்தார் அனிதா. அப்போதே தெரிந்துவிட்டது போட்டியின் ரிசல்ட்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அதேபோல ’கேசரி என்ன இனிப்பா இருக்கு? அதனால் நீங்க தோத்துட்டீங்க’ என்று முடிவை அறிவித்தார் ஜட்ஜ் அனிதா. (இன்னிக்கு இன்னும் எத்தனை ரோல் மிச்சமிருக்கோ) இதற்கு இடையில் அர்ச்சனா கண், நிஷாவின் கால் என ரத்த காயம் வாங்கிட்டு இருந்துச்சு இந்த டாஸ்க். இன்னொரு புறம் ‘ஷனம் வருதே மணம்’ என ரம்யா வார்த்தை விளையாட்டை இங்கே கன்டினியூ பண்னிக்கொண்டிருந்தார். அதை விடுங்க பாஸ். செமையா ஒரு விசில் அடிச்சாங்க ரம்யா.

அனிதா தீர்ப்பைப் பற்றி சுரேஷ் நக்கல் அடித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்கள் அர்ச்சனாவும் நிஷாவும். அந்தந்த கேரக்டராகவே மாறி பேசிக்கொண்டிருந்தார். ஆமா, சோம்ஸ், சுட்டிப் பையன் ஆஜித் எல்லாம் எங்கே?

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

வாழ்த்து கார்னரில்  வாழ்த்துகள் பரிமாற, சம்யுக்தா, ரியோ, அர்ச்சனா பிள்ளைகளுக்கு உருக்கமான வாழ்த்துகள் சொன்னார்கள். வழக்கம்போல ஆரி நீண்ட வாழ்த்து சொன்ன விதம் ‘சிலோன் ரேடியா அறிவிப்புபோல இருந்துச்சு. எப்பவுமே நீங்க இப்படித்தானா பாஸ்?

அப்பறம் என்ன செய்யலாம்… என பிக்பாஸ் டீம் யோசித்து புது ஐட்டம் என 7 ஸ்டோன்ஸ் விளையாட்டை ஆடச் சொன்னார்கள். இங்கேயும் வந்து வர்ணனை செய்வதாக ஆரம்பித்து விளையாட்டில் ஒளிந்திருப்பவர்களை அனிதா காட்டிக்கொடுக்க, யாரோ ஒருவர் சுட்டி கொட்டினார்கல். இதிலும் நகரத்து டீம் வெற்றி பெற்றது.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அடுத்து, பெண்கள் பற்றி ஆண்கள் பேசுவது. சம்யுக்தாவை அம்மா எனக் கட்டிக்கொள்ள, வழக்கம்போல ஆரி நீண்ட விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். ’உள்ளத்தில் உள்ளதைச் சொல்றேன்’ என வித்தியாசமாக ஆரம்பித்து மொக்கை போட்டுக்கொண்டிருந்தார் பாலா. வேல்முருகன் ஒவ்வொரு பெயரையும் வைத்து பாட்டாவே பாடிக்கொண்டிருந்தார். அப்பாடா… தலைக்கு வந்தது பாட்டோடு முடிஞ்சுது என நினைத்தால், பேசவும் ஆரம்பிச்சிட்டார். மனைவி பற்றி பேசிவிட்டு அம்மா, மனைவி, மகள் என ஒவ்வொருவருக்கும் பாட்டுகளைப் பாடினார்.

அம்மா பாட்டுக்கு ஷிவானி, மகள் பாட்டுக்கு அர்ச்சனா, நிஷா அழுதனர். உண்மையில் வேல்முருகன் செக்மெண்ட் நன்றாகவே இருந்தது. வெறும் பேச்சாகப் போய்க்கொண்டிருப்பது ரொம்பவும் டயர்டாக்கியது. ஆனால், அதற்காக நான் வாக்கிங்க போகப்போறேன் என்பதைக்கூட பாட்டாகவே பாடிட்டு இருக்கக்கூடாது வேல்ஸூ.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

‘நான் சிங்கிள் மதர் வளர்த்த பையன்’ என ஆரம்பித்து எல்லோரையும் அஷ்டலெஷ்மி என நமஷ்கரித்தார் சுரேஷ். ஆஹான். பட்டிமன்ற தீர்ப்புபோல அர்ச்சனா பேச, முடிக்கு வந்தது டாஸ்க்.

வண்ணம் தீட்டிய பொம்மைகளை அடுக்கி, பூஜை செய்துகொண்டிருக்க, வேல் முருகன் பின்னணி இசையாகப் பாடிக்கொண்டிருந்தார். திருவிழாக்களில் புனல் ஸ்பீக்கரில் ஒலிப்பதுபோன்ற ஒரு எஃபெக்ட். ஒரு சடங்கு செய்ய ‘சுமங்கலி வாங்க’ என்று அனிதாவை முதலில் செய்ய வைத்தார் சுரேஷ். அப்போ அவருக்குத் தெரியாது. இந்த அரை நிமிஷம், இன்றிரவு 3 மணி வரை சண்டையாகும் என்று.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

இன்னும் டைம் இருக்கே என்ன செய்யப்போறீங்க… என ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ் கேட்க, எடுடா அந்த பட்டிமன்ற கான்செப்ட்டை என்றார் பிக்கி. முதல்ல ஒரு பாட்டைக் கேட்போம் என்றார் தொகுப்பாளர் அனிதா. தெற்கு திசை சீமையில… பாடலைப் பாடினார் வேல்முருகன்.  இன்னிக்கு வேல்முருகன் சம்பளத்தை டபுளாக்கி தரணும். ஆமா, இன்னிக்கு முழுக்க ஒரு மனுஷனை பாட வெச்சிப் பார்ப்பீங்க.

கிராமமே என்று பேச ஆரி வந்தார். பிரசவத்தில் இறந்தவர்களின் நினைவாக சுமைதாங்கி கல், நாட்டு மாடுகள் அழிகிறது என நல்ல செய்திகளையும் நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.  பிக்பாஸ் எடிட்டர் டீ குடிக்க வெளியே போய்விட்டு வந்தபோதும் பேசிட்டு இருந்தார் ஆரி. எங்க நிலையை யோசிச்சிங்களா மிஸ்டர் எடிட்டர்?

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அடுத்து ரம்யா வந்தவரும் இழுத்துபேச முயன்றார் முடியவில்லை. இறுதியாக, ‘ஜல்லிக்கட்டுக்கு டவுன்காரங்களும் போராடினோம்’ எனச் சொல்லி கைத்தட்டு வாங்கி உட்கார்ந்தார்.

எல்லோரும் பேசுவாங்களோ என்று நமக்கு இருந்த பயத்தைப் போக்கி நிறைவுரையாக அனிதா, நகரத்தில் ‘என்ன ஆளுங்க’ என்று கேட்பதில்லை. அது நல்ல விஷயம்’ என்றார். (நகரங்களில் வெளிப்படையாக சாதி என்ன என்று கேட்பது இல்லை என்றாலும், வெஜ் ஒன்லி என்று போர்ட்டு தொங்குவதும், தாடி வைச்சிருந்த முஸ்லிமா எனச் சந்தேகப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது)

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அனிதா பிரச்சனைக்கு உரிய இன்னொரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தார் “சுரேஷ் சார், சுமங்கலி யார்னு கேட்டு என்னை முதல்ல செய்ய சொன்னார்… எனக்கும் அது பிடிச்சிருந்துச்சு. ஆனா, இந்தச் சடங்கில் நான் கணவனை இழந்திருந்தா என்ன ஆயிருக்கும்” என சரியாகவே பேசினார். மேலும், தன் மாமியார் விதவை என்பதால் அவர் நிகழ்ச்சிகளில் ஒதுங்கி ஒதுங்கி நின்றதையும் குறிப்பிட்டு பேசினார். உண்மையில் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் பெண்களுக்கு எவ்வளவு எதிராக இருக்கிறது என்பதை அழகாகவே சொன்னார். ஆனால், சுரேஷ் முகம் மாறிபோனது.

சரி… இன்னும் டைம் இருக்கே…. பாட்டைப் போட்டு ஆடச் சொல்லலாம் என முடிவெடுத்தார் பிக்கி. ஆட வருபவர் கேபி. சும்மாவே ஏதாச்சும் பாட்டு போட்டால் கேபியால் சும்ம நிற்க முடியாது. இப்போ சலங்கை வேற கட்டி விடுறீங்க என கேப்ரியல்லா அட்டகாசமான ஆட்டத்தை ஆடினார்.  அடுத்து, ஷிவானிவின் முறை. எல்லோருமே சேர்ந்து ஆட, ஆமா… பஞ்சாப் டீம் எவ்வளவு ஸ்கோர் என செக் பண்ணிக்கொண்டோம்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

பிக்பாஸ் வீட்டின் நிகழ்ச்சிகளை ஸ்பூஃப் பண்ணி விளையாடினார்கள். சோம்ஸ்தான் பிக்பாஸ். காலையில் பாட்டுப்போட்டதும் ஷனம் ஆடி புதிய கேப்டனாக பொறுப்பேற்று பிக்பாஸ் விதிகளை ஸ்பெல்லிங் மிஷ்டேக்கோடு படிக்க, அதை பிக்பாஸ் திருத்துவதுபோல நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது. பிக்பாஸான சோம்ஸிடம் ‘நீயாவது எனக்கு ஐ லவ் யூ’ சொல்லுங்க எனக் கேட்டுக்கொண்டிருந்தார் நிஷா. அடுத்டு ஆஜித்தின் சென்னை பாட்டு. கடைசியாக, சரஸ்வதி சபதம் படத்தை கூத்தாக நிகழ்த்திக்காட்டினார்கள் அர்ச்சனா, ரியோ, வேல்முருகன், கேபி, சம்யுக்தா, நிஷா. நிஷா நேரேட் பண்ண, டிராமாவாக நன்றாகவே இருந்தது.

அனிதா அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என நிஷா, அர்ச்சனா என மாறி மாறி அணத்திக்கொண்டிருந்தார் சுரேஷ். அனிதா சரியாதானே பேசினாங்க… இவர் ஏன் கோபப்படுறாரு.. என நினைப்பவர்களுக்கு சரியாக விளக்கிச் சொன்னார் ரியோ. அதாவது, ‘சுரேஷ் சார் என்னையைச் செய்யச் சொன்னர் என ஆரம்பித்ததால் அந்த உதாரணம் அவரைக் கடுப்பாக்கிடுச்சு’ என்றார்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

சுரேஷின் கோபம் தேவையற்றது என்பதே எல்லோரின் எண்ணமும். இன்னும் கொஞ்சம் டைம் இருக்கே என்றதும், ஸ்டார் மியூஸிக் ஐட்டமான சைகை மூலம் பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை ஆடச் சொன்னார் பிக்கி. அதில் கிராமத்து டீம் ஜெயித்தார்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

அனிதா – சுரேஷ் சண்டையை சமாதானம் செய்ய ரியோ எவ்வளவோ முடிந்தும் சுரேஷ் இடம்கொடுக்காமல் செல்ல, போ… போய் படு. விடிஞ்சுட்ம் போலிருக்கும் என அனிதாவின் அதட்டி அனுப்பினார் ரியோ.

இன்றைய நிகழ்ச்சியில் இருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒன்று அனிதா… பலருக்கு இரிட்டேட்டாக இருந்தாலும் இவ்வளவு நேரம் தொகுத்து பேசுவது எனும் கமிட்மெண்ட் என்பது பெரிய விஷயம். பலர் கிண்டலடித்தாலும் சரியாகவே செய்தார்.

அனிதா தொகுக்க, வேல் முருகன் பாட, ஆரி பேச…. நான்ன்ன்ன்ன்கு மணி நேர பிக்பாஸ்! #BiggBoss

இன்னொருவர் வேல்முருகன். இவர் பாடலைக் கிண்டல் செய்தாலும் அவற்றைக் கழித்துப்பார்த்தால் சீரியல் பார்ப்பதுபோலாகி இருக்கலாம். நல்ல பாடல்களைப் பாடினார். ஆனால், நிறைய பாடினார். அதைக் குறைத்துக்கொள்ளலாம்.

ஷார்ப்பாக எடிட் செய்தால் நார்மல் டே…  ரிலாக்ஸாக எடிட் செய்தால் ஸ்பெஷல் டே என்று உணர்த்தியிருக்கிறார் பிக்கி. இனிமேல் ஸ்பெஷல் டே கேட்பீங்க?

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

இருபத்தி ஒன்று