புற்றுநோயின் பிடியில் காமெடி நடிகர்! மனம் இருப்பவர்கள் உதவி செய்யக் கோரிக்கை

 

புற்றுநோயின் பிடியில் காமெடி நடிகர்! மனம் இருப்பவர்கள் உதவி செய்யக் கோரிக்கை

காமெடி நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்தில் காமெடி நடிகர் படுகாயம்.. புகைப்பட கலைஞர் மரணம்.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தவசி. பெரிய மீசையும், தாடியும், குரலும் தான் அவரின் நடிப்பு அடையாளம். “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கடும் ஏழ்மையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் தவசி, தன்னுடைய சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மொட்டை அடித்து தவசி எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன்னுடைய தொடர்பு எண்- 9659662482, இதுவே என்றும், உதவி செய்ய தயாராக இருப்பவர்கள் தன்னை அழைக்குமாறும் தவசி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கிய தவசி படுகாயமடைந்தார். அதில் இருந்து மீண்டு வந்த அவர் தற்போது புற்றுநோயுடன் போராடி வருகிறார்.