தட்டார்மடம் செல்வன் கொலை : திருமண வேல் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

 

தட்டார்மடம் செல்வன் கொலை : திருமண வேல் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி திருமணவேலை கட்சியிலிருந்து தலைமை நீக்கியுள்ளது.

நிலத்தகராறு காரணமாக கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் திருமண வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தட்டார்மடம் செல்வன் கொலை : திருமண வேல் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

இதை தொடர்ந்து தலைமறைவான அதிமுக பிரமுகர் திருமண வேலை போலீசார் தேடி வந்த நிலையில் திருமண வேல், முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

தட்டார்மடம் செல்வன் கொலை : திருமண வேல் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

இந்நிலையில் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் கைதான திருமண வேல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமண வேல் ( தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது ” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.