’இதனால்தான் விளையாட வில்லை’ மலிங்கா சொல்லும் புது காரணம்!

 

’இதனால்தான் விளையாட வில்லை’ மலிங்கா சொல்லும் புது காரணம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவின் பந்து வீச்சு உலகப் புகழ்பெற்றது. ஒரு காலக்கட்டத்தில் இவரின் பந்து வீச்சுக்கு அஞ்சாத பேட்ஸ்மேன்களே இல்லை என்ற நிலை இருந்தது.

மலிங்காவின் பந்து வீச்சில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அது சர்ச்சையைக் கிளப்பவும் தவறவில்லை. பந்தை கிரிக்கெட் பவுலிங் விதிக்கு உட்பட்டு வீச வில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது வைக்கப்பட்டது. அதனால், அவரின் பந்து வீச்சு மீது சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியாக, அவர் சரியாகவே பந்து வீசுகிறார் என்ற தீர்ப்பு வந்தது.

’இதனால்தான் விளையாட வில்லை’ மலிங்கா சொல்லும் புது காரணம்!

இமலிங்கா டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 338 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது தேவை ஐபிஎல் போட்டிகளிலும் இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மலிங்கா.

இஇந்த ஆண்டு மும்பை அணிக்காக மலிங்கா ஐபிஎல் தொடரில் ஆடியிருக்க வேண்டும். ஆனால், சொந்த காரணங்களால் தொடரிலிருந்து விலகினார். இப்போது இலங்கையில் எல்.பி.எல் போட்டியில் கண்டி அணியின் கேப்டனே அமலிங்காதான். ஆனால், அவர் எல்.பி.எல் தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

’இதனால்தான் விளையாட வில்லை’ மலிங்கா சொல்லும் புது காரணம்!

மலிங்காவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என பலரால் பல கோணங்களில் யூகிக்க முடிந்தது. ஆனால், மலிங்காவே தம் முடிவு குறித்து தெரிவித்திருக்கிறது. அதில், “என் பவுலிங் மற்றும் ஆட்டத்திற்கான காலம் முடிவடையும் நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். எனவே புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விலகியிருக்கிறேன்’என்று புதிய காரணத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுதான் உண்மையா.. அல்லது கொரோனா அச்சத்தால் விலகியிருக்கிறாரா என்றும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.