திமுகவின் கோட்டையாக மாறும் சென்னை; தந்தி டிவி கருத்துக்கணிப்பு இதோ!!

 

திமுகவின் கோட்டையாக  மாறும் சென்னை;   தந்தி டிவி  கருத்துக்கணிப்பு இதோ!!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திமுகவின் கோட்டையாக  மாறும் சென்னை;   தந்தி டிவி  கருத்துக்கணிப்பு இதோ!!

அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தேர்தல் குறித்த தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் தேர்தல் கருத்து கணிப்பில் பெரும்பாலான திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்று முடிவு வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. முதல்கட்டமாக சுமார் 50 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதில், திமுக வெற்றி வாய்ப்புகள் உள்ள தொகுதி என்ற பட்டியலில் திருத்துறைபூண்டி, தளி ,சிவகாசி, அறந்தாங்கி, மதுரை வடக்கு ,செஞ்சி, திருப்பத்தூர் ,வாசுதேவநல்லூர் ,கிருஷ்ணகிரி ,திருச்சுழி, தஞ்சாவூர், மொடக்குறிச்சி, கீழ்பெண்ணாத்தூர், துறையூர், ஆம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் தாம்பரம், பூந்தமல்லி, வில்லிவாக்கம், அண்ணா நகர், தியாகராய நகர், மதுரை கிழக்கு, பெரியகுளம், ஆத்தூர், உதகமண்டலம் ,ஆலந்தூர், பெரம்பூர் ,திருவிக நகர், சைதாப்பேட்டை, மதுரை மத்தி ,உசிலம்பட்டி ,கம்பம் ,குளித்தலை, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுக , திமுகவுக்கு இடையே ஆலங்குளம், பூம்புகார் ,பட்டுக்கோட்டை ,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.