கோட்டையைப் பிடிக்கும் திமுக… தந்தி டி.வி.கருத்துக் கணிப்பு இதோ!

 

கோட்டையைப் பிடிக்கும் திமுக… தந்தி டி.வி.கருத்துக் கணிப்பு இதோ!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதால் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கோட்டையைப் பிடிக்கும் திமுக… தந்தி டி.வி.கருத்துக் கணிப்பு இதோ!

அரசியல் களத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஆட்சியை பிடிப்பது மிக முக்கியம். மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட தேர்தல் இது. அதே நிலை தான், எடப்பாடிக்கும்.

கோட்டையைப் பிடிக்கும் திமுக… தந்தி டி.வி.கருத்துக் கணிப்பு இதோ!

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக இருந்தது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்றே அவை ஒருமித்த கருத்தை முன்வைத்தன. திமுக வேட்பாளர்கள், முக்கிய புள்ளிகளின் பேச்சிலும் அது வெளிப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளை தந்தி டி.வி வெளியிட்டுள்ளது. இதுவும் திமுகவுக்கே சாதகமாக உள்ளது. மொத்தமாக உள்ள 234 தொகுதிகளில் 133 இடங்களை திமுக கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக 68 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் 33 இடங்களில் கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கிறது. இந்த கணிப்பு உண்மையானால் திமுக ஆட்சி நிச்சயம்… என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!