’பெரிய தொகையை நிதிஉதவி தந்த இந்தியாவுக்கு நன்றி’ மாலத்தீவு நெகிழ்ச்சி

’பெரிய தொகையை நிதிஉதவி தந்த இந்தியாவுக்கு நன்றி’ மாலத்தீவு நெகிழ்ச்சி

கொரோனவின் பெரும் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் ஏராளம். மனிதர்களுக்கு நோய்த் தொற்றாகி மரணம் அடைவது ஒரு துயரம் எனில், அந்தந்த நாடுகளின் பொருளாதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில்கூட ஜிடிபி மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது.

மாலத்தீவில் இதுவரைக்கும் மொத்த கொரோனா பாதிப்பு 10,291 பேர். இவர்களில் 9,108 பேர் சிகிச்சையால் குணமடைந்தனர். 34 பேர் இறந்துவிட்டனர்.

’பெரிய தொகையை நிதிஉதவி தந்த இந்தியாவுக்கு நன்றி’ மாலத்தீவு நெகிழ்ச்சி

இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ‘தம் நாட்டுக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். அதனால், இந்தியா 250 மில்லியன் டாலரை மாலத்தீவுக்கு நிதி உதவியாக அளித்தது.

’பெரிய தொகையை நிதிஉதவி தந்த இந்தியாவுக்கு நன்றி’ மாலத்தீவு நெகிழ்ச்சி

தற்போது ஐக்கிய நாடுகளின் 75 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா சாகித், ‘எங்கள் நாட்டிற்கு 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1800 கோடி ரூபாய்க்கு அதிகம்) எனும் பெரும் தொகையை அளித்தது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் இக்கட்டான நேரத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.