“அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக கடமையாற்றினேன்” : கிரண்பேடி அறிக்கை

 

“அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக கடமையாற்றினேன்” : கிரண்பேடி அறிக்கை

புதுச்சேரியில் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு கடமையாற்றினேன் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து 4 எம்எல்ஏ க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும்சூழலில் எம்எல்ஏக்கள் ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் உள்ளதால் நாராயணசாமி அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பின்னர் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து அதிரடி திருப்பமாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

“அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக கடமையாற்றினேன்” : கிரண்பேடி அறிக்கை

காரணம் பாஜகவை கிரண் பேடி ஆளும் கட்சிக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டு வந்ததாகவும், இதனால் புதுச்சேரியில் இந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனால் ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற முதல்வர் நாராயணசாமி, குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.அதன்படி நேற்று கிரண் பேடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரிஆளுநராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கிரண் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். எனது அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்துள்ளேன். தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது; ஆனால் அது மக்களின் கையில் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.