அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

தஞ்சாவூர்

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வரும் 26ஆம் நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதயவிழா ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா,

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

சதய விழாவாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் அரசு சார்பில் தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்படும். 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மங்கல இசை, திருமுறை பாசுரங்கள் இசைக்கப்பட்டு, கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து, ராஜராஜன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும். பின்னர், தமிழ்

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது வழங்கும் விழாவும், பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அபிஷேகங்களும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், நடப்பு ஆண்டு கோரோனோ பரவல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

செய்யப்படுவதாக சதயவிழா குழுவினர் அறிவித்துள்ளது. .இதன்படி, வரு 26 ஆம் தேதி காலையில் மாமன்னர் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து, பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்றும், தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நடைபெறும் என்றும் விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.