ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா – ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா – ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூர்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, இன்று காலை தஞ்சை பெருவுடையார் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள ஓதுவார்கள் சன்னதியில் தமிழ் மறைகளை ஓதி பெருவுடையார்

ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா – ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

சன்னிதியை வலம் வந்தனர். தொடர்ந்து, நாதஸ்வரம் இசை முழங்க தஞ்சை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், தர்மபுர ஆதீனத்தை சேர்ந்த கட்டளை விசாரணை சொக்கலிங்க சாமிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்ற மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்,

ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழா – ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வழக்கமாக ராஜராஜ சோழனின் சதயவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், கொரோனோ காரணமாக நாட்கள் நடைபெறும் சதயவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு விழா மட்டும் நடைபெற்றது.