தஞ்சாவூர்- கூடுதல் விலைக்கு உரம் விற்பனை – 2 கடைகளுக்கு சீல்வைப்பு

 

தஞ்சாவூர்- கூடுதல் விலைக்கு உரம் விற்பனை – 2 கடைகளுக்கு சீல்வைப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்த 2 தனியார் உரக்கடைகளுக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் கடைகளில் உரங்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்

தஞ்சாவூர்- கூடுதல் விலைக்கு உரம் விற்பனை – 2 கடைகளுக்கு சீல்வைப்பு

அடிப்படையில், அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் உரக் கடைகளில், வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 தனியார் கடைகளில் உரங்கள் விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த 2 கடைகளையும் பூட்டி, சீல்வைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து

தஞ்சாவூர்- கூடுதல் விலைக்கு உரம் விற்பனை – 2 கடைகளுக்கு சீல்வைப்பு

தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள், சம்பா நடவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் கையிருப்பில் இல்லை என்றும், இதனால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு தேவையான உரங்களை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்