தஞ்சாவூர்- செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்

தஞ்சாவூர்- செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, தஞ்சை மாவட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவ,

தஞ்சாவூர்- செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்

மாணவியர் பயிற்சி மேற்கொண்டு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற ஏதுவாக மத்திய அரசால் இந்த மைதானத்தை, இந்திய விளையாட்டு குழுமம் மூலம் ஆய்வுசெய்து, பின்னர் சர்வதேச அளவில் ஓடுதள பாதை மற்றும் மின்கோபுரம் அமைக்க 6.26 கோடி ரூபாய் நிதி

தஞ்சாவூர்- செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்

ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணியை துவங்கிவைத்து ஆட்சியர் ஆய்வுசெய்தார். ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட தடகள விளையாட்டு கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உடனிருந்தனர்.