செந்தில் பாலாஜிக்கு தங்கர்பச்சான் வைக்கும் புதிய கோரிக்கை

 

செந்தில் பாலாஜிக்கு தங்கர்பச்சான் வைக்கும் புதிய கோரிக்கை

தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருந்த மாதாந்திர மின் கட்டண முறையை கொண்டு வந்தால் மின் கட்டண சுமை குறையும். மக்கள் இதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை வைக்க, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதைபடித்துவிட்டு அதிகாரிகளை அனுப்ப, அவர்கள் தங்கர்பச்சான் வீட்டுக்கு சென்று மின்கட்டண முறைகள் குறித்து விளக்கிவிட்டு சென்றனர். சட்டமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின் போதும், தங்கபச்சான் சொன்ன புகாருக்கு அவருக்கு அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு தங்கர்பச்சான் வைக்கும் புதிய கோரிக்கை

இதன்பின்னர் தங்கர்பச்சான், நான் புகார் தெரிவிக்கவில்லை. கோரிக்கை தான் வைத்தேன். மின்கட்டண முறை புரியவில்லை என்று நான் சொல்லவில்லை. மாதாந்திர மின் கட்டண முறையை கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னேன் என்று சொல்ல, தங்கர்பச்சான் கோரிக்கை மின் கட்டணம் புரியவில்லை என்பது அல்ல, மாதாந்திர மின் கட்டணம் பற்றியதுதான். அந்த கோரிக்கை படிப்படியாக நிறைவேறும் என்று பதிலளித்தார் செந்தில்பாலாஜி.

இதற்கு தங்கர்பச்சான், படிப்படியாக மாற்றப்படும் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். இதை படிப்படியாக எப்படி மாற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் மேலும், ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் என்கிற முறையினையும் மாற்ற வேண்டும் என்கிற புதிய கோரிக்கை ஒன்றினையும் முன் வைத்திருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு தங்கர்பச்சான் வைக்கும் புதிய கோரிக்கை

அதே நேரத்தில், மின்கட்டன விளக்கம் கேட்டு, அதற்கு விளக்கம் அளித்ததாக சட்டப்பேரவையில் பேசியது அவைக்குறிப்புகளில் இடம்பெற்றுவிடும். அப்படி தவறான பதிவாக இருந்துவிடும் என்பதால் அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது குறித்து அமைச்சரிடம் இருந்து இதுவரைக்கும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.