மின்வெட்டு விவகாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய தங்கமணி!

 

மின்வெட்டு விவகாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய தங்கமணி!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியிருப்பதாகவும் மின்வெட்டு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்றும் அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

மின்வெட்டு விவகாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய தங்கமணி!

இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு முறையாக செய்யப்படாததால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் 10 நாட்களுக்குள் மின்வெட்டு பிரச்னை சரி செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 4000 மெகாவாட் வரை காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் போது மின் தடை ஏற்பட காரணம் என்ன? 10 நாளில் மின்தடை சரி செய்யப்படும் எனக் கூறும் அமைச்சர் 7ஆம் தேதியிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தார்? என கடுமையாக விமர்சித்தார். மேலும், சென்னையில் புதைவடம் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அங்கு ஏன் மின்தடை ஏற்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.