”தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது”

”தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது”

தொழில்துறையினருடன் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

”தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஊரடங்கை அமல்படுத்த தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது. வரும் நாட்களில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மே 11ம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக ஸ்டெர்லைட் உறுதி அளித்துள்ளது” என தெரிவித்தார்.