“ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை… சசிகலா காலில் தஞ்சம்” – போட்டுத்தாக்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

 

“ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை… சசிகலா காலில் தஞ்சம்” – போட்டுத்தாக்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

2001ஆம் ஆண்டு ஆண்டிபட்டி எம்எல்ஏவாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அந்தச் சமயம் டான்சி வழக்கால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, முதலமைச்சராகி மீண்டும் அப்பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வழக்கில் விடுதலையான பிறகு அதிமுக கோட்டையான ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார். 2001ஆம் ஆண்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானாலும் ஜெயலலிதாவுக்காக தங்க தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை… சசிகலா காலில் தஞ்சம்” – போட்டுத்தாக்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் அரசை எதிர்த்து கவன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குறித்து விமர்சித்துப் பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், முன்னாள் அதிமுக புள்ளி இந்நாள் திமுக பிரபலமான தங்கதமிழ்ச்செல்வனை ஒரண்டை இழுத்தார். அதாவது ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்ய அப்போதைய எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தயங்கியதாகவும், அவரை ஒரு நாள் இரவு முழுவதும் நான் உள்ளிட்டோர் பேசி சமாதானம் செய்தாகவும் கூறினார்.

“ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை… சசிகலா காலில் தஞ்சம்” – போட்டுத்தாக்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

இதனால் கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ்ஸின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார். “அப்போதைய சபாநாயகர் காளிமுத்துவையும், என்னையும் அழைத்த ஜெயலலிதா என்னை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார். எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். மேலும் ராஜினாமா செய்யும் விஷயம் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டதால், எனது மனைவி மற்றும் உறவினர்களுக்குக் கூட நான் சொல்லவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த பிறகுதான் நான் ராஜினாமா செய்தது அனைவருக்கும் தெரியும். என்னை ஓபிஎஸ் சமாதானம் செய்ததாகவும் கூறியிருப்பது தவறு. அவருடைய ரகசியங்கள் ஒவ்வொன்றையும் நான் வெளியிடுவேன்” என்று கூறியிருந்தார்.

“ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை… சசிகலா காலில் தஞ்சம்” – போட்டுத்தாக்கிய தங்க தமிழ்ச்செல்வன்!

இச்சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஓபிஎஸ்ஸை சராமரியாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா காலில் ஓபிஎஸ் விழப்போவது உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்யும்போது தேனியில் பேசிய ஓபிஎஸ்ஸிடம், சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பொதுக்குழு தான் தீர்மானிக்கும் என்றார். இன்று சசிகலாவை மிக கடுமையாக எதிர்க்கும் ஓபிஎஸ் அன்று ஏன் சசிகலாவை சேர்க்க மாட்டோம் என உறுதியாக சொல்லவில்லை. அவருக்கு ஆண்மை இருந்திருந்தால் சொல்லியிருப்பார். அதிமுகவை சசிகலா மீண்டும் கைப்பற்றினால், அவர் காலில் ஓபிஎஸ் தஞ்சமடைவார் என்பது உறுதி” என்றார்.