அங்குட்டு 2 விருப்ப மனு… இங்குட்டு ஒரு ‘முத்த’ சிலை – அப்பாவையும் மகனையும் குஷிப்படுத்திய தங்க தமிழ்ச்செல்வன்!

 

அங்குட்டு 2 விருப்ப மனு… இங்குட்டு ஒரு ‘முத்த’ சிலை – அப்பாவையும் மகனையும் குஷிப்படுத்திய தங்க தமிழ்ச்செல்வன்!

தான் ஒரு முன்னாள் அதிமுககாரர் என்பதையே மறந்து முழு சந்திரமுகியாக, அதாவது அக்மார்க் திமுககாரராக மாறி நிற்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவரது ட்விட்டருக்குள் நுழைந்தாலே 2019ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி திமுகவில் இணைந்த புகைப்படத்தையே Pin செய்திருக்கிறார். அப்படியே உள்ளே போனால் அண்ணா அறிவாலயத்தின் வீடியோவைப் போட்டு சிலாகித்தும், ஸ்டாலினுக்குப் பாராட்டு பத்திரம் வாசித்தும் வைத்திருக்கிறார்.

அங்குட்டு 2 விருப்ப மனு… இங்குட்டு ஒரு ‘முத்த’ சிலை – அப்பாவையும் மகனையும் குஷிப்படுத்திய தங்க தமிழ்ச்செல்வன்!

கீழே செல்ல செல்ல தான் அந்த ட்வீட் கண்ணில் பட்டது. ஸ்டாலின் உதயநிதிக்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சிலையாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் அந்த ட்வீட்டில் இடம்பெற்றிருந்தது. இளைஞரணிச் செயலாளராகப் பதவியேற்று ஸ்டாலினிடம் வாழ்த்துபெற்ற உதயநிதிக்கு முத்தம் கொடுத்திருப்பார். அந்தப் புகைப்படம் அப்போதே செம வைரலானது. தற்போது அந்தப் புகைப்படத்தை சிலையாக வடிவமைத்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

முன்னதாக, பிப்ரவரி 28ஆம் தேதி அவரின் ஆஸ்தான தொகுதியான ஆண்டிப்பட்டியிலும், ஓபிஎஸ்ஸின் ஆஸ்தான் தொகுதியான போடிநாயக்கனூரிலும் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். அதன்பிறகே இந்த ட்வீட்டைப் பகிர்ந்திருக்கிறார். இதன்மூலம் ஒரே நேரத்தில் அப்பாவையும் மகனையும் குஷிப்படுத்தியிருக்கிறார்.