இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

 

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே விருப்ப மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுகவும் அதிமுகவும் அடுத்தடுத்து அறிவித்தன. அந்த வகையில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆஸ்தான தொகுதியான போடிநாயக்கனூரில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். விருப்ப மனு என்பதெல்லாம் சம்பிரதாயம் தான். ஸ்டார் வேட்பாளர்களுக்கு கேட்கும் தொகுதி முன்பதிவு செய்யப்பட்டுவிடும். தற்போது திமுக சார்பில் போடிநாயக்கனூரில் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல அதிமுகவில் இருந்தபோது அவரின் ஆஸ்தான தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிடவும் விருப்ப மனு வழங்கியிருக்கிறார்.

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

ஹாட்ரிக் நாயகன்… ஜெயலலிதாவின் ராசியான தொகுதி!

அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டியில் மூன்று முறை போட்டியிட்டுள்ள (2001,11,16) தங்க தமிழ்ச்செல்வன் ஹாட்ரிக் வெற்றிபெற்று செல்வாக்குமிக்க நபராகப் பார்க்கப்படுகிறார். டான்சி வழக்கால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, முதல்வராகி மீண்டும் அப்பதவி முடக்கப்பட்டது. வழக்கில் விடுதலையான பிறகு அதிமுக கோட்டையான ஆண்டிப்பட்டி 2002 இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார். 2001ஆம் ஆண்டு வெற்றிபெற்றாலும் ஜெயலலிதாவுக்காக தங்க தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். இப்படிப்பட்ட வரலாறு கொண்டது ஆண்டிப்பட்டி தொகுதி.

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

கோட்டையைத் தகர்த்த திமுக

அதேபோல 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவின் மகராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் கோட்டையை மீண்டும் தகர்த்தது திமுக. அதற்குக் காரணம் செல்வாக்குமிக்க தங்க தமிழ்ச்செல்வன் அமமுக சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிட்டார். இதனால் பலமிழந்தது அதிமுக. இதனைச் சரியாகப் பயன்படுத்தி திமுக வென்றது. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் அங்கு போட்டியிட்டால் அது திமுக கோட்டையாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அமமுக சார்பில் தினகரன் ஆண்டிப்பட்டி, போடி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியாகினும் ஆண்டிப்பட்டி தொகுதி நிச்சயம் கவனம் பெறும் ஒரு தொகுதியாக அமையும்.

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

ஓபிஎஸ் மகனுக்கு டஃப் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுகவிலிருந்து வெளியேறி தினகரனுக்கு ஆதரவாக நின்று எம்எல்ஏ பதவியை இழந்தவர்களில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இதனால் அமமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது. கூடவே 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பதற்குக் கடும் முட்டுக்கட்டையாக அமைந்தன தங்க தமிழ்ச்செல்வன் வாங்கிய ஓட்டுகள்.

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

செத்தாலும் திமுகவுல சேர மாட்டேன்

கிட்டத்தட்ட 1 லட்சம் ஓட்டுகளை அவர் பிரித்தார். வெற்றிபெறாததால் அவர் திமுகவில் இணைவார் என அரசல்புரசலாகப் பேசப்பட்டது. அப்போது செத்தாலும் திமுகவில் சேர மாட்டேன் என வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் அந்த வாக்குமூலம் கொஞ்ச நாட்களுக்குக் கூட நிலைக்கவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே திமுகவுடன் இணைந்து ஆச்சரியமூட்டினார். இருக்கவே இருக்கிறது ஒரு பழமொழி அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை. திமுகவில் எம்எல்ஏ, எம்பி பதவியே வேண்டாம்; கடைநிலை தொண்டனாக இருந்தாலே போதும் என்று அவர் கூறியது தான் அதிர்ச்சி ரகம். தற்போது திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறார்.