“எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது” - யூடியூபர் இர்ஃபான்

 
ழ்

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.

youtuber irfan baby

பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.  பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து, கடந்த 19ம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது  சர்ச்சையாக வெடித்த நிலையில்,  தமிழக சுகாதாரத்துறை இர்ஃபானுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. திமுகவுடன் இர்ஃபான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இர்ஃபான் உதயநிதியோட நண்பர் - அதனால தான் கேஸ் இல்லை - ஜெயக்குமார் ஆவேசம்!! -  தமிழ்நாடு

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள யூடியூபர் இர்ஃபான், “அரசியல் பின்புலம் எனக்கு ஆதரவாக உள்ளதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது. அதற்காக என்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள்? என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.