சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்த இளைஞர்- உடல் சிதறி பலி

 
கத்திப்பாரா

சென்னை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 50 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில், நிகழ்விடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடந்த உயிரிழப்பால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் தற்கொலையா? அல்லது வாகனம் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜா என்பது தெரியவந்தது. சாமுவேல் ராஜா தான் வந்த இருசக்கர வாகனத்தை பாலத்தின்மேல் நிறுத்திவிட்டு மேலிருந்து கீழே குதித்ததாகவும், திட்டமிட்டு தற்கொலைதான் செய்துகொண்டதாகவும் இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.