பொங்கல் தொகுப்பில் பல்லி- மன உளைச்சலில் இளைஞர் தீக்குளிப்பு

 
fire

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மன உளைச்சலில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu pongal Gift: பொங்கல் பரிசில் செத்துக்கிடந்த பல்லி… வாங்கிய  கையோடு வாந்தி எடுத்த பயனாளி! - lizard found in tamarind pack for tamil nadu  govt pongal gift pack in tiruttani ...

சரவண பொய்கை திருக்குளம் அருகே உள்ள சுப்பிரமணியசுவாமி பண்டகசாலையில், அதே பகுதியை சேர்ந்த நந்தன், பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளார். அந்த தொகுப்பிலுள்ள புளியில் உயிரிழந்த பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை எண்ணி மன உளைச்சலுக்குள்ளானார்.

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி, நந்தன் மீது பண்டகசாலை ஊழியர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் நந்தனும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்நிலையில் பெட்ரோல் ஊற்றி நந்தனின் மகன் குப்புசாமி (வயது 36), தீ குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர். திருத்தணி அரசு மருத்துவமனை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.