கல்லூரி மாணவியை கடத்தி சென்று உடலுறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

 
Abuse

தேனி அருகே திருமண ஆசை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று உடலுறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மாணவியை கடத்திய வழக்கிற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Daniel
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த டேனியல் ராஜ் என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் உடலுறவு கொண்டதற்காக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், இளைஞர் டேனியல் ராஜுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூவாயிரம் ரூபாய் அபராதமும்,  அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால மெய்க்காவல் சிறைத்தண்டனையும், மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக இரண்டு வருடகால சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் அதை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதகால சிறை தண்டனை விதித்து இன்று தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜே வெங்கடேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.