9-ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் போக்சோவில் கைது!

 
sabari

வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டதில் தாய் உதவியுடன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HC: Horoscope mismatch no reason to back out of marriage | India News -  Times of India

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டத்தில் வசிக்கும் இளைஞர் மோகன சபரி (26). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் சண்முகசுந்தரத்தின் மனைவி அங்கம்மாள் என்பவர் உதவியுடன் அவரது மகளான 9-ஆம் வகுப்பு படிக்கும், மாணவிக்கு தாலி கட்டியதாக மாணவியின் பாட்டி வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்தார்.

இதனடிப்படையில், வாழப்பாடி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உமா சங்கர் அவர்கள் மோகன் சபரியை போக்சோவில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.