வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்

 
protest

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியில் திருமணமாகி ஒரு ஆண்டு ஆன நிலையில், இளம் பெண் அபிதா (24) நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் சார் ஆட்சியர் விசாரணைக்காக பெண்ணின் உடல் தற்போது வரை உடற்கூறு ஆய்வு செய்யாமல் செஞ்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் அபிதா தற்கொலை  செய்து கொண்டதற்கு காரணமான கணவனை கைது செய்யாததை கண்டித்து, அப்பெண்ணின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.

வரதட்சனை கொடுமையால் தான் அபிதா கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அவரது கணவன் மீது, அவரது குடும்பத்தினர் மீது இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து சார் ஆட்சியர் அமித் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரனை மேற்கொண்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.