ஆதார் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம்!

 
ஆதார்

ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App பயனர்கள் பணம் அனுப்பலாம் என்று UIDAI கூறியிருக்கிறது. 

டிஜிட்டல் உலகம் அபரிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. கல்விக்கட்டணத்தில் இருந்து மளிகை சாமான் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் அல்லது UPI ID இல்லாதவர்களுக்கும் கூட அவர்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App பயனர்களாக இருந்தால் பணம் அனுப்பலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) கூறியிருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு NPCI - வால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட்  ஆப் BHIM app. இதில், ஆதார் எண்ணை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய அவரது 12 டிஜிட் யுனிக் ஆதார் நம்பரை எண்டர் செய்து Verify பட்டனை அழுத்த வேண்டும்