சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு!

 
death

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த தவறி விழுந்த தொழிலாளி உயிரிழ்ந்தார்.

Rajouri Garden Man Allegedly Beaten To Death By Neighbours In Delhi Over A  Fight: Police

மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் எப்போதும் சுமார் 6 அடிக்கு அதிகமாக நீர் இருந்தே கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நீர் மேலும் அதிக அளவில் உள்ளது. இதற்கிடையில் நேற்று இரவு தேங்கி உள்ள சுரங்கப்பாதை நீரில் ஒருவரின் சடலம் மிதப்பதை பார்த்த மக்கள் உடனே இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மிதந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சரவணன் (45) என்பதும் கார்பென்டர் வேலை பார்த்து வந்த இவர் சுரங்கப்பாதை நீரில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.