குக்கர் வெடித்து பெண் பலி! கோவில்பட்டியில் சோகம்
கோவில்பட்டி அருகே வ.உ.சி. நகரில் உள்ள வீடு ஒன்றில் குக்கர் வெடித்து, பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த குருசாமி மனைவி சாந்தி(45) இவர் வழக்கம் போல் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குக்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில், சாந்தி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரது கணவர், சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் குக்கர் வெடித்து பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.