சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நீதி ஒதுக்கீட்டீல் இதுல எது உண்மை?- திமுக எம்பி வில்சன்

 
P. Wilson - திமுக உறுப்பினர் பி.வில்சன்

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி  எழுப்பினார்.

metro

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி. வில்சன், “சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தை இணைக்கும் மெட்ரோ வழித்தடத்தின் தற்போதைய நிலை மற்றும் அவ்வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் காலம் ஆகிய விவரங்கள் தெரிவிக்க வேண்டும். அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டின் விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் டோகன் சாகு, “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்திற்கான மொத்த மதிப்பு ரூ.85,395 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.15,355 கோடி முழுவதையும்  ஒன்றிய அரசு விடுவித்துள்ளது” என்றார். இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய திமுக எம்பி வில்சன், “தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.986.78 கோடி என்று ஒன்றிய அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது. இதில் எந்த எண்ணிக்கை சரியானது? ஒன்று மட்டும் நிச்சயம், தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை” எனக் கூறினார்.