கணவன் உடலருகே அழுது மயங்கி விழுந்த மனைவி -தூக்கிப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி

 
ஹ்

கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்திருக்கிறார்.  இந்த பாச தம்பதிகளின் உயிரிழப்புகள் செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்துள்ளன.

சிங்கப்பெருமாள் கோவில் கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 80).  இவரது மனைவி பானுமதி(வயது70).  இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், உறவினர் ஒருவரின் ஆண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.  அந்த குழந்தை வளர்ந்து தற்போது 35 வாலிபராகிவிட்டார்.

ப்

ராமலிங்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக முடக்குவாத நோயினால் படுத்த படுக்கையாக கிடந்திருக்கிறார்.  இந்நிலையில் நேற்றைய முன்  தினம் அவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார்.

இதனால் பேரதிர்ச்சி அடைந்த மனைவி பானுமதி, கணவரின் உடல் அருகே அமர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.  கொஞ்ச நேரத்தில் அவர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார்.   அவரை தூக்கி பார்த்தபோதுதான் அவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த பாசத்தம்பதிக்கு வளர்ப்பு மகன் ஜெயராமன் இறுதிச்சடங்குகளை செய்துள்ளார்.

கணவர் இறந்த துக்கத்தால் மனைவி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.