வீட்டுக்கு வர மறுத்த மனைவியை நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் சாய்த்த கணவன்

 
rஆ

சந்தேகப் புத்தியால் கணவனிடமிருந்து விலகி பெற்றோருடன் தனியாக வசித்து வந்த இளம் பெண்ணை மீண்டும் வாழ வீட்டுக்கு அழைத்து இருக்கிறார்.  அவர் பிடிவாதமாக வர மறுத்து விட்டதால் நடு ரோட்டிலேயே கத்தியால் சரமாரியாக குத்தி ரத்தவெள்ளத்தில் சாய்த்திருக்கிறார் கணவன்.  இந்த சம்பவத்தில் தப்பியோடிய கணவனை பிடித்துவிட்டார்கள் போலீசார்.

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சௌந்தர்.   இவர் சென்னையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.   சென்னை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

 திருமணத்திற்கு பின்னர் மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  இதனால் சௌந்தரை விட்டு பிரிந்து சென்று பெற்றோருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்  சந்தியா.   ஒவ்வொருமுறை தகராறு ஏற்படும் போதும் தாய் வீட்டிற்கு சென்று வரும் சந்தியா நிரந்தரமாக தாய் வீட்டிலேயே ஒரு வருடமாக சென்று தங்கி இருக்கிறார்.

ச

 கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சென்னை பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் சந்தியா.  வழக்கம்போல் நேற்று முன்தினம் சந்தியா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது சந்தியாவை வழிமறித்து பேசியிருக்கிறார் சவுந்தர்.

தன்னுடன் வரும்படி மீண்டும் வழ வரும்படி கேட்டிருக்கிறார் .  அதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.   இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சவுந்தர்,   எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவை வயிறு,  கழுத்து என்று சரமாரியாக குத்தி இருக்கிறார்.  

 இதில் அலறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருக்கிறார் சந்தியா.  இதைப்பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார் சவுந்தர்.  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்துள்ளனர்.    அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த  சவுந்தரை  தேடி வந்த நிலையில் நேற்று போலீசார் கைது அவரை செய்துள்ளனர்.