திராவிடத்திற்கு என்ன நிறம்? சூர்யாவுக்கு பாஜக கேள்வி

 
su

நடிகர் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தமிழ் கதாநாயகி வேண்டுமென்றும்,  அதற்காக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பு என்று ஒரு போட்டோ கார்டு வைரலாகி வருகிறது.

 அந்த போட்டோ கார்டில் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு தமிழ் கதாநாயகியான தேடல், தேர்ந்த நடிப்பு திறனுடன் ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.   18- 25 வயதுள்ள திராவிட நிறம் கொண்ட,  தமிழ் தெரிந்த பெண்கள் தங்களின் இயல்பான புகைப்படங்களையும் தங்களைப் பற்றிய சுய விபரங்களையும் கீழக்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

d

இதற்கு தமிழக பாஜக  பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’திராவிடத்திற்கு என்ன நிறம்? யார் சொல்வார்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.  இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.   

திராவிட நிறம் உங்க தலைக்கு மேல இருக்கு. ஆரிய நிறம் எங்க காலுக்கு கீழ இருக்கு என்கிறார் சண்முக சுந்தரம்(@shantweetzz).  அசுரர்கள் என எங்களை உருவகப்படுத்த படங்களில் எங்களுக்கு தனி நிறம் கொடுத்த ஆரியர்களுக்கு எங்களின் நிறம் தெரியாமல் போனது ஆச்சரியமே.. என்ற கேள்வியை எழுப்புகிறார் @RhinoExtinct.

srr

ஆரியத்துக்கு நிறம் உண்டுதானே? அதேபோல் திராவிட நிறமும் உண்டு சேகரு. ஆரியத்துக்கான நிறம் அடுத்தவன் உழைப்பில் உடலை பசுமையாக வளர்த்த நிறம். திரவிட நிறம் கள்ளகபடம் அற்ற உழைக்கும் வர்க்கத்தின் கருப்ப நிறம் என்கிறர் கே.சந்திரசேகர்.

மாநிறம் தான் திராவிட நிறம். கறுப்பும் சிகப்பும் கலந்தது.  காவி நிறம்னா ஈரானிய / யூதர்கள்  நிறம். காவி கருத்தியல் பிதாமகர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து தான் வந்தனர். காவிகள் alien என கூறுவோறும் உண்டு. மனிதர்களே ஏலியன்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் என கூறுவோருமுண்டு  என்கிறார் @tntechnologist.     கருப்புதான்டா திராவிட நிறம் என்கிறார் @sivanandam502.

எஸ்.ஆர்.சேகருக்கு எதிராக இப்படி பல பேர் கிளம்ப,  சூர்யாவுக்கு எதிராக பலர் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  சூர்யா, உங்கள் தந்தை என்ன நிறம்? அப்படியானால் அவர் திராவிடன் இல்லையே! அவர் திராவிடன் இல்லையென்றால் நீங்களும் திராவிடன் இல்லை.  அது சரி, திராவிட நிறத்தின் மீது என்ன திடீர் பாசம்? ஜோதிகாவை திருமணம் செய்யும் போது இல்லாத ஞானம் இப்போது திடீரென வருகிறதே! என்று கேட்கிறார் @makkal_atchi.