ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய இணையதள முகவரி அறிவிப்பு

 
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் தேர்வில் ஆள்மாறாட்டம்  செய்தது உறுதி - BBC News தமிழ்

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம்  பெயர்களை பதிவு செய்யலாம் என்றும், இந்த இணையதளத்தில் மாடுபிடி வீரரின் புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ்  பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று காளைகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.