நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

 
ச்

HMPV வைரஸ் பரவல் எதிரொளி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு எந்த கட்டுபாடும் விதிக்கபடவில்லை என்றும் வரும் நாட்களில் HMPV வைரஸ்  தொற்று அதிகரித்தால் கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

mask

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட  மாநிலங்களில் சிலருக்கு  HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. அது குறித்து உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு: கர்நாடகாவில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால் நீலகிரி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

அதற்காக நீலகிரி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தபடும் என்ற அவர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிக்க குழுக்கள் அமைக்க இருப்பதாகவும், பொங்கல் தொடர் விடுமுறையின் போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும்  தெரிவித்தார். ஆனால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர எந்த வித கட்டுபாடும் விதிக்கபடவில்லை என்ற அவர் வரும் நாட்களில் HMPV வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுபாடுகள் விதிக்கபடும் என்ற லட்சுமி பவ்யா, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு HMPV தொற்றோ அல்லது வழக்கமான காய்ச்சல் இருந்தாளோ அவர்களது பாதுகாப்பு மட்டுமின்றி நீலகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி முககவசம் கட்டாயமாக அணிந்து வருமாறு கேட்டுகொள்வதாக கூறினார்.