ஜெய்பீம் பிரச்சனையில் திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்போம் - அமைச்சர் சாமிநாதன் பரபரப்பு

 
jஅ

ஜெய்பீம் பிரச்சனையில் முதல்வருடன் கலந்து பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்துவோம். அதேநேரம் திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்போம் என்று தெரிவித்துள்ளார்  அமைச்சர் சாமிநாதன்.

ஜ்

அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாக பல நூற்றாண்டுகளாக உள்ளது.  இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவரின் பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம் மற்றும் குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர வன்னியர் சங்கம் தொடரவுள்ளது. எனவே, ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என கோரிக்கை வைக்கிறோம் என்று  மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், தமிழ்நாடு தகவல் மற்றும் பொதுவிவகாரத் துறை செயலர் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்  காமராசர் அவர்களின் நினைவில்லத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இதுகுறித்து பேசினார்.  

ஜ்ஜ்

‘’ ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அந்தப் படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கூடாது என்று வன்னியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.   இந்த பிரச்சினை தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்துவோம்’’ என்று தெரிவித்துள்ள அவர்,   ’’வன்னியர் சங்கத்தின் கோரிக்கை நியாயமாக இருந்தால் பரிசீலிப்போம்.  அதேநேரம் திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.