‘பாஜக – பாமக இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்’ – திருமாவளவன் திட்டவட்டம்!

 

‘பாஜக – பாமக  இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்’ – திருமாவளவன் திட்டவட்டம்!

பாமக – பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்று எம்.பி. திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘பாஜக – பாமக  இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்’ – திருமாவளவன் திட்டவட்டம்!

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில்,” திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது. எங்கள் கட்சியில் சில கட்டமைப்புகளில் மாறுபாடுகளை செய்து வருகிறோம். அதை செய்த உடன் நாங்கள் தேர்தல் பணியை தொடருவோம். திமுகதான் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும். எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வற்புறுத்தவில்லை. தனிச்சின்னத்தில் போட்டியிடும் போது வெற்றி பாதிப்புகள் அதிகம். திமுக தரப்பில் நியாயம் இருக்கிறது. இருப்பினும் சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கும் இருக்கிறது. விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் நாங்கள் முடிவெடுப்போம்; தனி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி. பாமக – பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம்” என்றார்.

‘பாஜக – பாமக  இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்’ – திருமாவளவன் திட்டவட்டம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் நீடிப்பதாக அக்கட்சியின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணியில் விசிக , மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்ததுடன், இது கூட்டணியை உடைக்க நடக்கும் சதி என்றார். முன்னதாக மதிமுக , விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்த தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.