வயநாடு நிலச்சரிவு - மற்றொரு தமிழர் உடல் கண்டெடுப்பு
![நிலச்சரிவு](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3db04f5b2c2b3d9b2aea7d12deb0393e.jpg)
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2 மணி தொடங்கி தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என வழித்தடங்கள் புதைந்துள்ளன. இப்பகுதிகள் தனித்தீவுப்போல் காட்சியளிக்கும் நிலையில், 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி கூடலூரை சேர்ந்த 34 வயது இளைஞர் காளிதாஸ் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வயநாட்ய் சூரல்மலையில் உள்ள கோயிலில் கல்யாண்குமார் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.