ஜம்மு - காஷ்மீர் வாக்குப்பதிவு - 9 மணி நிலவரம் இதோ..!

 
Kashmir Election

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.  

ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  அதன்படி காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து , தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். 

ஜம்மு - காஷ்மீர் தேர்தல்

10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில போலீஸார் என பல அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.  பலத்த பாதுகாப்புடன் காலை முதலே  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 11.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.