"தொடர்ந்து நடிப்பேன் முடிந்தால் தடுத்து பாருங்கள்" - தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் சவால்

 
vishal 34

தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் சவால் விடுத்துள்ளார்.

vishal

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் நிதி பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டதாக விஷால் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இதனை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விஷால் தலைவராக இருந்தபோது சங்கத்திற்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்த குற்றச்சாட்டிற்கு விஷால் பதிலளிக்காத நிலையில், விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. விஷாலை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து அதன்பிறகே பட வேலைகளை தொடங்க வேண்டுமென தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் சவால் விடுத்துள்ளார். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் விஷால் கூறியுள்ளார். உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள், தொழிலுக்கு உழைக்க நிறைய இருக்கிறது என்றும் விஷால் கூறியுள்ளார்.