வில்லன் வீட்டில் தேவர் படம் - டே சூர்யா அயோக்கிய பயலே என புரடியூசர் ஆவேசம்

 
ka

 வில்லன் வீட்டில் அக்னி கலச காலண்டர் மாட்டப்பட்டிருந்ததும்,  வில்லனுக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையாகி பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை ,பண்ருட்டி, கரூர், சேலம் ,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சூர்யாவின் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி கொந்தளித்து வருகின்றனர்.

வ்

 இந்த நிலையில் வில்லன் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படம் மாற்றியிருந்தது.   அதற்காக சூர்யா மீது குற்றம் சாட்டி இனி தென்மாவட்டங்களில் சூர்யாவின் படங்களை வெளியிட விட மாட்டோம் என்ற கொந்தளிப்பு கிளம்பியிருக்கிறது .

வில்லன் கதாபாத்திரத்திற்கு மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின் பெயரை வைத்தாலும் வன்னியர் சங்கத்தின் அடையாளமான அக்னி கலசத்தை வில்லன் வீட்டின் காலண்டரில் வைத்திருந்ததாலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல ,இயக்குனர்கள் பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் பலர்  அன்புமணிக்கு எதிராக கிளம்ப,  வன்னிய சமூகத்தை அவமதித்து விட்டவர்களுக்காக இப்படி சிறிய வருகிறீர்களே உங்கள் தேவர் சமூகத்தை  அவர் அவமதித்திருந்தால்  நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ப்ர்

 இந்த நிலையில் தேவர் சமூகத்தையும் சூர்யா அவமதித்து விட்டதாக சொல்லி எதிர்ப்பு கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .  மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் படம் திரையிடப்பட்டு இருந்தபோது பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டு தியேட்டரைவிட்டு படம் தூக்கப்பட்டது.  அந்த வேல் படத்தில்தான் தேவரை சமுதாயத்தையும் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.


 கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த அந்த வேல் படத்திற்கு இப்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.   பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஏ. எம் சவுத்ரி தேவர்தான் சூர்யாவிற்கு எதிராக கொந்தளித்து இருக்கிறார்.    வேல் படத்தின் வில்லன் வீட்டில் தேவர்படம் இருப்பதாகவும்,   தேவரை அவமதித்த சூர்யாவின் படங்கள் இனி தென் மாவட்டங்களில் தியேட்டருக்கு வர விடமாட்டோம் என்றும்,   டே சூர்யா அயோக்கிய  பயலே வேலு படத்தில் வில்லன் வீட்டில் தேவர் போட்டோ மாட்டிருக்க இனிமேல் உன் படம் தென் மாவட்டத்தில் ஓடாது என்று  அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சவுத்ரி தேவரின் இந்த மிரட்டல் ட்விட்டர்  பதிவினை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அம்