ரூ.2,000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.. தரதரவென இழுத்து சென்று கைது செய்த போலீஸ்

 
ச்

ரூ.2,000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை தள்ளிவிட்டும், ஆண்களை சட்டையைப் பிடித்து இழுத்தும் சென்ற போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக புயல் காரணமாக  விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் மழை பெய்தது. இதனால் நீர் நிலையங்கள் நிரம்பி பல்வேறு வீடு மற்றும் நிலங்களில் தண்ணீர் புகுந்து புகுந்து பல்வேறு பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2000 நிவாரணம் வழங்கி வருகிறது. சில இடங்களில் உரிய நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள குன்னம் கிராம மக்கள் புதுவை- மயிலம்- திண்டிவனம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தரவென தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும் போதுமான போலீசார் மற்றும் பெண் போலீசார் இல்லாததாலும் பொதுமக்கள் வாக்குவாதத்தை தொடர்ந்து, போலீசார் கைது செய்தவர்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தகவல் அறிந்த அங்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.