தனியார் பள்ளி மீது நடவடிக்கை - மாவட்ட கல்வி அலுவலர் தகவல்
விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்தான வகையில் செயல்பட்ட தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் லியோ லட்சுமி என்ற மூன்றரை வயது குழந்தை கல்வி பயின்று வந்தது. லியோ லட்சுமி பள்ளியில் விளையாடி கொண்டிருந்த போது, அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி மீது ஏறியுள்ளது. அப்போது அந்த தொட்டியின் இரும்பு மூடி திடீரென உடைந்ததில் அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்தான வகையில் செயல்பட்ட தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி முதல்வர் அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.