பிரபாகரனை சீமான் பலமுறை அவதூறாக பேசியுள்ளார்- விஜயலட்சுமி

 
விஜ

பிரபாகரன் அவர்களைப் பற்றி கிண்டல் கேலியாக சீமான் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

vijayalakshmi seeman chennai


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதில் இருந்து பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பெண் செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்ப, ஆமாம் அந்த போட்டோவில் இருப்பது நான் அல்ல, நான் பிரபாகரனை சந்திக்கவே இல்ல என ஆவேசமாக பதில் அளித்தார்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, “பிரபாகரனின் அண்ணன் மகனை சீமான் எவ்வளவு கேவலமாக பேசினார் என்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திர்கள். சீமானுக்கு கோபம் வந்தால் பிரபாகரனின் உருவத்தை கேலி பண்ணும் விதமாக குண்டு மகன், குண்டு மகன் என்றுதான் கேவலமாக பேசுவார். அந்த மாதிரி சீமான் என்கிட்ட பேசின பல ஆடியோக்களை வைத்து 2011ல் அதிமுக காலகட்டத்தில் சீமான் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அதனபின் அந்த வழக்கை சீமான் நடத்தப்படவில்லை. அதனால் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டேன். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதூறாகவும், கொச்சைப்படுத்தியும் பலமுறை பேசியுள்ளார். நான் கும்பிடுற சிவபெருமான் மேல சத்தியமா நான் சொல்லுவேன்.. இதே காது பிரபாகரன் குறித்து அவதூறாக பேசியதை கேட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.